
கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் வெள்ளை அம்மன் நகரைச் சேர்ந்த முத்துவின் மனைவி கலா என்ற மூதாட்டி நேற்று இரவு வீட்டின் வாசற்படியில் பாய் விரித்து படுத்து தூங்கியுள்ளார். இந்நிலையில், இன்று காலை காது மற்றும் மூக்கு அறுபட்ட நிலையில் கலா சடலமாக கிடந்ததை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கலா அணிந்திருந்த நகைகளுக்காக அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.