
குன்றத்துார் ஒன்றியம், வஞ்சுவாஞ்சேரி கிராமத்தில்வண்டலுார்–வாழாஜாபாத் சாலையோரம் அமைந்துள்ள ஏரி, அப்பகுதி மக்களின் முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையில், மர்ம நபர்கள் சிலர் இரவு நேரங்களில் ஏரியில் கட்டடக் கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், நீர்நிலையை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், இது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரி வஞ்சுவாஞ்சேரி ஏரியில் தொடர்ந்து கழிவுகளை கொட்டுபவர்களை கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
