
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினவு தினத்தை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
முன்னாள் குடியரசு தலைவரும், இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்று அன்போடு அழைக்கப்படும் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் 2015ம் ஆண்டு காலமானார். அவரின் நினைவாக ராமேஸ்வரம் அருகே உள்ள பேக்கரும்பு என்ற இடத்தில் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் அவரது நினைவு நாளான இன்று அவரது குடும்பத்தினர், கலாமின் உருவ படத்திற்கு மலர்கள் தூவி, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து மறைந்த டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் எளிமை மற்றும் அவரின் தொலைநோக்கு பார்வையை நினைவு கூறும் வகையில் வி த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை மற்றும் அவரது ஆதரவாளர்கள் அப்துல் கலாமின் உருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
