
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப்பணி வழங்கிய தமிழ்நாடு அரசின் பணி ஆணையை ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்த 31 பேருக்கு முதலமைச்சர் விஜய் கடந்த ஜூலை 10ஆம் தேதி அரசுப்பணிக்கான ஆணையை வழங்கினார். இதனை எதிர்த்து நாதக உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று வழங்கப்பட்ட நிலையில், அதில் முதலமைச்சர் விஜய் வழங்கிய அரசு பணி ஆணை விதிகளுக்கு முரணாக இருப்பதாக கூறி ரத்து செய்யப்பட்டது. மேலும், இது போன்ற சில சம்பவங்களை முன்னுதாரணமாக காட்டிய நீதிமன்றம், கருணை அடிப்படையில் இந்த பணியினை வழங்க முடியாது என்று தீர்ப்பில் தெரிவித்துள்ளது. முதலமைச்சர் தலைமையில் வழங்கப்பட்ட பணி ஆணை ரத்து செய்யப்பட்ட விவகாரம் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


