அரசியல்

6 எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை : சபாநாயகரிடம் விளக்கக் கடிதம்

ராஜினாமா செய்த 6 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் உறுதி அளித்துள்ளதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவில் இருந்து விலகி த.வெ.க-வில் இணைந்த 6 பேர் எம்.எல்.ஏ-க்கள் மீது கட்சி காவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியறுத்தி அதிமுக சார்பில் சபாநாயகரிடம் அளிக்கப்பட்ட மனுவுக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் தரப்பில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தளவாய் சுந்தரம் சபாநாயகரிடம் பதில் கடிதம் வழங்கிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 6 சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுகவுக்கும், மக்களுக்கும் துரோகம் செய்து விட்டதாக குற்றம் சாட்டிய அவர்கள், ராஜினாமா செய்த 6 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button