
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி. தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் தொடர்ந்து குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டினார்.பெண்களுக்கு எதிரான குற்றங்கள், ஆணவக் கொலைகள், காவல் மரணங்கள் உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டிய அவர், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், அவர்கள் மீது சில நேரங்களில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்த அவர், கட்சி நிர்வாகிகள் மீதான புகார்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்றும் விமர்சித்தார். மேலும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கின் நிலை மிகப்பெரிய கேள்விக்குறியாகிய உள்ளதாக தெரிவித்த அவர், சட்டமன்றமே ரீல்ஸ் போலத்தான் நடந்து வருகிறது என கடுமையாக விமர்சித்தார்.
