
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது .இந்தக்கூட்டத்தில் கலந்துகொண்ட 2,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அரிசி, தையல் இயந்திரம், கேஸ் அடுப்பு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த கூட்டத்தில் பேசிய கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி. எஸ். பாபு, தமிழ்நாட்டில் இனிமேல் திமுகவும், அதிமுகவும் ஆட்சிக்கு வராது என்றும், இனி தமிழக வெற்றிக் கழகம்தான் ஆட்சியை அமைக்கும் என்றும் தெரிவித்தார். மேலும், மு.க. ஸ்டாலின் மட்டுமல்ல, கருணாநிதி வந்திருந்தாலும் கொளத்தூரில் தோல்வி அடைந்திருப்பார்கள் என விமர்சித்த அவர், திமுகவை சேர்ந்தவர்கள் ஒரே ஒரு எம்எல்ஏவை வெற்றி பெறச் செய்தாலும் தனது பாதி மீசையை எடுத்துக்கொள்வதாக சவால் விடுத்தார்.தொடர்ந்து பேசிய அவர் “கொளத்தூர் கொத்து பரோட்டா” என்ற தனது வழக்கமான விமர்சனத்தையும் முன்வைத்தார். இவரை தொடர்ந்து பேசிய அமைச்சர் மரிய வில்சன், முதலமைச்சரின் சொந்த தொகுதிக்கு வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், தமிழக அரசின் 100 நாள் சாதனையை ஊழலுக்கு எதிரான கொண்டாட்டமாக பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், தனது வாழ்க்கையில் நடைபெற்ற உண்மை சம்பவம் ஒன்றையும் மேடையில் பகிர்ந்து கொண்ட அவர், இன்னும் இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், “பிரதமர் ஜோசப் விஜய்” என அழைக்கப்படும் அளவுக்கு பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்ற பிறகு பெரம்பூரில் நடைபெற்ற முதல் பொதுக்கூட்டம் இது என தெரிவிக்கப்பட்ட நிலையில், பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.