அரசியல்

மாணவர்களின் போராட்டத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் : அமைச்சர் வலியுறுத்தல்

நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டத்திற்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் மாணவர்கள் அறவழியை பின்பற்றினால் ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து, டெல்லியில் ஜனநாயக முறைப்படி நடைபெறும் மாணவர்களின் போராட்டத்திற்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீதான கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், நீட் தேர்வு ஒழிப்பு என்பது தான் தமிழ்நாடு அரசின் நீட் தேர்வு குறித்த நிலைப்பாடு என்று திட்டவட்டமாக தெரிவித்த அவர், நீட் தேர்வு விவகாரத்தை தமிழ்நாடு அரசு சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் என்று தெரிவித்தார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button