அரசியல்

வேலூர் : அதிமுக நிர்வாகி திடீர் மரணம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வேலூரில் உள்ள அவரது சொகுசு விடுதியில் தொண்டர்கள் காத்திருந்தபோது ,அங்கு திரண்டிருந்த கட்சி நிர்வாகிகள் மத்தியில் அரப்பாக்கத்தைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளர் காமராஜுக்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது 108 ஆம்புலன்ஸ் வருவதில் தாமதம் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் சிஎம்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட காமராஜை, பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button