
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில், நடிகர் அஜித்தை முன்னிறுத்தி ரசிகர்கள் சார்பில் அனைத்து நண்பர்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சி தொடங்கப்பட்டுள்ளது.
குன்றத்தூரில் நடைபெற்ற கட்சியின் முதல் நிர்வாகிகள் அறிமுகக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 100 அஜித் ரசிகர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு, நாளைய முதல்வரே பதவியேற்க வா உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்ற பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ரசிகர்கள், அஜித்தின் புகைப்படத்திற்கு பால் அபிஷேகம் செய்து, நாளைய முதல்வர் அஜித் என முழக்கங்களை எழுப்பினர்.
இதை தொடர்ந்து, கட்சியின் தலைவர் பாபு கட்சிக் கொடியையும் கார் சின்னத்தையும் அறிமுகப்படுத்தினார். பின்னர் கட்சி நிர்வாகிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
