
திண்டுக்கல் நத்தம் சாலையில், RMTC காலனி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த விபத்தில் காவலர் சாமிநாதன் உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் மதுவிலக்கு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சாமிநாதன், நத்தம் நீதிமன்ற பணிக்காக காரில் சென்றுவிட்டு மீண்டும் திண்டுக்கல் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காவலர் சாமிநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

