செய்திகள்

சைப்ரஸ் : படகு கவிழ்ந்து விபத்து – 8 பேர் பலி

சைப்ரஸ் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள டயானா பீச் அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. துருக்கி ஆக்கிரமிப்பில் உள்ள வடக்கு சைப்ரஸின் கைரேனியா நகரில் இருந்து, துருக்கியின் டசுகு நகருக்கு அந்தப் படகு புறப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, படகில் மொத்தம் 270 பேர் பயணம் செய்த நிலையில், கைரேனியா நகரில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் கடலில் படகு கவிழ்ந்தது. இதில் பலர் கடலில் விழுந்து தத்தளித்தனர். மேலும், இந்த தகவல் அறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர், கடலில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 237 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், காணாமல் போன 22 பேரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் வடக்கு சைப்ரஸ் பிரதமர் உனல் உஸ்டெல் தெரிவித்துள்ளார். இதனிடையே, படகின் கேப்டன் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு, விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button