
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பரவக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியை அமைச்சர் விஸ்வநாதன் பார்வையிட்டபோது, பள்ளியில் அறிவியல் ஆய்வுக்கூடம் மற்றும் விளையாட்டு மைதானம் அமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் அளித்த கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி முன்பைவிட தற்போது நிமிர்ந்து நிற்பதாக தெரிவித்தார். இதனால் திமுக கூட்டணியில் இருந்து தற்போது வெளியேறிவிட்டதாக கூறிய அமைச்சர், காங்கிரஸ் கட்சியை விமர்சிப்பவர்கள் நாகரிகமான முறையில் விமர்சித்தால், அதற்கு உரிய பதில் அளிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

