திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகேயுள்ள கொல்லப்பட்டி சமத்துவபுரம், கணவாய் மேடு பகுதிக்கு அருகே இன்று பிற்பகல் பழனிச்சாமியின் மனைவி அஞ்சம்மாள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அவருடன் சென்றிருந்த உறவினர்களின் குழந்தைகள் சாலையோரமாக அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த பால் ஏற்றிச் சென்ற வேன், திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் அமர்ந்திருந்த குழந்தைகள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் நாகராஜின் மகள்களான யோகவர்ஷினி, அனன்யா, தனுஸ்ரீ, மோசிகரன் ஆகிய 4 குழந்தைகளும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அந்த குழந்தைகளுடன் இருந்த மூதாட்டி அஞ்சம்மாள், விபத்தின் அதிர்ச்சியில் மயக்கமடைந்தார். இந்த விபத்தை ஏற்படுத்திய பால் வேன் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. மேலும், இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த 4 குழந்தைகளின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய பால் வேனை போலீசார் பறிமுதல் செய்ததுடன், தப்பிச் செல்ல முயன்ற ஓட்டுநரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பிஞ்சு குழந்தைகள் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Read Next
2 weeks ago
வேட்டையாட பயன்படுத்த பதுக்கி வைத்திருந்த நாட்டுதுப்பாக்கி இரும்பு கண்ணிகள் மற்றும் நைலான் நரம்பு சுருக்கு வலைகள் பறிமுதல் – இருவர் கைது – நத்தம் வனத்துறையினர் அதிரடி
2 weeks ago
பைனான்சியரிடம் நகை பறிக்க முயற்சி – பரோலில் வந்த கைதி உட்பட ஐந்து பேர் கைது
2 weeks ago
தேசிய அளவிலான துப்பாக்கி சூடும் போட்டியில் இரண்டாம் இடத்தை திண்டுக்கல் மாவட்டதை சேர்ந்த ஹாரிஷா
2 weeks ago
அணையில் 15 நாட்களுக்கும் மேலாக மீன்பிடிக்க செல்லாமலும் , கூலி உயர்வு மற்றும் நிலுவைத் தொகை வழங்க கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
2 weeks ago
கல்குவாரிக்கு சாதகமாக கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற முயன்ற அதிகாரிகள் – தீர்மானத்தை நிறைவேற்ற போராடிய பத்து கிராம மக்கள்
2 weeks ago
கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
2 weeks ago
துப்பாக்கி , வன உயிரின பாகங்கள் பறிமுதல் – வனச்சரகர் தலைமையிலான வனத்துறையினர் அதிரடி
3 weeks ago
தஞ்சாவூரில் விபச்சார வழக்கு – தி.மு.க. நிர்வாகி கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம்
3 weeks ago
ஜெம் வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்
3 weeks ago
தூத்துக்குடி : மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் முகாம் – கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என புகார்
Related Articles
குரங்கு தாக்கியதில் மூதாட்டி உயிரிழப்பு
3 weeks ago
திருப்பாலைக்குடி : பாய்மரப் படகு போட்டி
August 28, 2026
ரஜினி மருத்துவமனையில் திடீர் அனுமதி
October 28, 2021
Check Also
Close

