
தமிழக சட்டமன்றத்தில் ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் பழைய பிரச்சினைகளைத் தான் பேசி வருவதாகவும், அது டிராமா மன்றமாகி விடக்கூடாது என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். கோவையில் உள்ள கொங்குநாடு கல்லூரில் மாணவர் சங்க தொடக்க விழாவில் அவர் கலந்துகொண்டபோது, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,பேசிய அவர் நேபாளத்தில் நிகழ்ந்திருப்பது மிகப்பெரிய சோகம் என்றும், தமிழக அரசு, பாதிக்கப்பட்டவர்களை மீட்டுக் கொண்டுவர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை கேட்டுக்கொண்டார். இதையடுத்து, தற்போது வெளியாகும் திரைப்படங்களில் பெண்களை மோசமாக சித்தரிக்கும் நிலை உள்ளதாகவும், சிறுவர்கள் பார்க்கும் வகையிலான காட்சிகள் இல்லை என்றும் அவர் குறை கூறினார். இதை தொடர்ந்து , சென்சார் போர்டு, அதிக கவனம் செலுத்தி, குறிப்பிட்ட காட்சிகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், சட்டமன்றம் டிராமா மன்றமாக மாறிவிடக்கூடாது என்றார்.