
சேலத்தில் மேட்டூர் அணை திறப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, சேலம் அரசு மருத்துவமனை அருகே தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள புதிய நவீன கட்டிடத்தை முதலமைச்சர் விஜய் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தமிழன் பார்த்திபன், வரும் 1ஆம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் விஜய் சேலம் வர உள்ளதாக தெரிவித்தார். முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அணை திறப்புக்கான பணிகள் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

