
தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 1-ம் தேதி முதல் திரைப்படங்களை வெளியிட மாட்டோம் என தயாரிப்பாளர்கள்தான் அறிவித்துள்ளதாகவும், திரையரங்குகள் ஸ்டிரைக் அறிவிக்கவில்லை என தெரிவித்துள்ளார். இதன் பிறகு வெளியாகும் திரைப்படங்களை திரையிட திரையரங்குகள் தயாராக இருப்பதாகவும் கூறினார். மேலும், தங்களது கோரிக்கைகளை அரசிடம் தெரிவிக்காமல் திடீரென ஸ்டிரைக் அறிவித்துவிட்டு, முதல்வர் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கேட்பது எந்த வகையில் நியாயம் என்றும் கேள்வி எழுப்பினார். திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடி தளங்களில் வெளியிட வேண்டும் என்பதில் திரையரங்கு உரிமையாளர்கள் உறுதியாக இருப்பதாகவும் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்தார்.



