செய்திகள்

சென்னை : போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

சென்னை பல்லவன் சாலையில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் அலுவலகம் முன்பு, சிஐடியு சார்பில் போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அரசாங்கப் போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச் செயலாளர் தயானந்தன் செய்தியாளர்களிடம் பேசிய போது, சென்னையில் போக்குவரத்து பணிமனைகளை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும்,காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் ,ஒப்பந்த முறையை கைவிட வேண்டும் என்றும் , மின்சார பேருந்துகளை தமிழ்நாடு அரசே இயக்க வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு, வடமாநில தொழிலாளர்களை போக்குவரத்துத் துறையில் நியமிக்கக் கூடாது எனவும் கோஷங்களை எழுப்பினர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button