
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியில், பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு குறைந்தது ரூ.10 உயர்த்தக் கோரி விவசாயிகள் சாலையில் பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு சமீபத்தில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி அறிவித்திருந்த நிலையில், இந்த விலை உயர்வு போதுமானதாக இல்லை என விவசாயிகள் தெரிவித்தனர். மேலும், பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு குறைந்தது ரூ.10 உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து, கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் சாலையில் பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



