தொழில்நுட்பம்

தூத்துக்குடி : மக்கள் நலக் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் – தமிழக இளைஞர்களுக்கே வேலைவாய்ப்பு வழங்க கோரிக்கை

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் நலக் கூட்டமைப்பு சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் பணியாற்றி வருவதால், தமிழக இளைஞர்கள் மற்றும் உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் 90 சதவீத வேலைவாய்ப்பை தமிழகத்தைச் சேர்ந்த உள்ளூர் இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு வழங்கும் வகையில் சிறப்பு சட்டத்தை நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என மக்கள் நலக் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தமிழக இளைஞர்களுக்கே வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர் .

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button