
திண்டுக்கல் மாவட்டம் தங்கம்மாபட்டியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மல்லையன் சாமி திருக்கோயிலில் பாரம்பரிய மாடு மாலை தாண்டும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் 18 மந்தைகளைச் சேர்ந்த 250 மாடுகள் மாலை தாண்டும் திருவிழாவில் பங்கேற்றன. மாடுகள் கொத்துக்கொம்பு பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து பாரம்பரிய முறைப்படி அவிழ்த்து விடப்பட்டன. மேலும் , மாடுகளை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மாடு ஓட்டம் நடைபெற்றது. இதை தொடர்ந்து,பொதுமக்கள் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும் என்றும் , மக்கள் நல்வாழ்வுடன் வாழ வேண்டும் என்றும், இந்த விழா நடத்தப்பட்டதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியை பெரிய மந்தை நாயக்கர், கோப்பா நாயக்கர், ஊர் மந்தை நாயக்கர் அல்லிமுத்து உள்ளிட்டோர் முன்னிலையில் விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதனைதொடர்ந்து, பாரம்பரிய மாடு ஓட்டத் திருவிழாவை காண சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.