
மத்திய பிரதேசம் மாநிலம் பீனாகஞ்ச் பகுதியில், சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் ஏற்றி வந்த டேங்கர் லாரி, கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து நடந்தவுடன் டேங்கரில் இருந்து எண்ணெய் சாலையில் வழிந்தோடியது. இந்த தகவலறிந்த கிராம மக்கள் வீடுகளிலிருந்து பாத்திரங்கள் எடுத்து வந்து வழிந்தோடிய எண்ணெயை போட்டி போட்டு சேகரிக்கத் தொடங்கினர். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விபத்துக்குள்ளான வாகனம் அருகில் செல்வது ஆபத்தானது எனக் கூறி எச்சரித்தனர். அதனை கேட்காத பொதுமக்கள் எண்ணெயை எடுப்பதிலையே கவனமாக இருந்ததால் போலீஸார் அங்கிருந்த பொதுமக்களை விரட்டியடித்தனர். இதனை தொடர்ந்து, லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ஓட்டுநர் மதுபோதையில் வாகனத்தை ஓட்டியதே இந்த விபத்திற்கு காரணம் என்று கூறியுள்ளனர்.


