செய்திகள்

பூந்தமல்லி : அரசு உதவி பெறும் பள்ளியில் உணவில் பல்லி இருந்ததாக புகார் – 17 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

சென்னை பூந்தமல்லியில் அரசு உதவி பெறும் பள்ளியில் இன்று காலை உணவு சாப்பிட்ட 17 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தமிழ்நாட்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பூந்தமல்லியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் இன்று காலை வழக்கம் போல் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. அதைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவர்கள், சாப்பாட்டில் பல்லி இருப்பதைக் கண்ட ஊழியர்கள் அதிச்சியடைந்தனர். இதையடுத்து, உடனடியாக மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவது நிறுத்தப்பட்டு ஏற்கெனவே அந்த உணவைச் சாப்பிட்ட 17 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் அந்த மாணவர்களை பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பள்ளி நிர்வாகம் அழைத்து செல்லப்பட்டனர். மேலும், இது குறித்து புகார் அளிக்கப்பட்டது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button