செய்திகள்

100 நாட்கள் ஆகியும் கேப்டன் சமாதிக்கு ஏன் செல்லவில்லை? – விஜயபிரபாகரன்

சென்னை அனகாபுத்தூர் பகுதியில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, அனகாபுத்தூரில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தேமுதிக மாநில இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, மேடையில் பேசிய அவர் அவர் விஜய் மீது எனக்கு எந்த வித கோபமும் இல்லை என்றும் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அனைத்து கட்சித் தலைவர்களையும் விஜய் சந்தித்தார். இதை தொடர்ந்து, பெரியார் சமாதிக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சென்று வந்தார். ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாட்கள் ஆகியும் கேப்டன் விஜயகாந்த் சமாதிக்கு ஏன் செல்லவில்லை? என விஜயபிரபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தேமுதிக கட்சி ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி என்றும், கடந்த 20 ஆண்டுகளாக கட்சிக்காக போராடி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து, மாற்றத்தை எதிர்பார்த்து மக்கள் வாக்களித்த நிலையில், தற்போது அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாகவும், ஆளும் கட்சிக்கு ஆரம்பகாலத்தில் அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர் விஜயகாந்த் என்றும் அவர் கூறினார். மேலும், சட்டப்பேரவை நடவடிக்கைகள் தற்போது பட்டிமன்றம் போல் மாறிவிட்டதாகவும், தலைவர்கள் ஒருவரையொருவர் மாற்றி மாற்றி குறை கூறுவதிலும் வாழ்த்துத் தெரிவிப்பதிலும் மட்டுமே காலம் கழிப்பதாகவும் கடுமையாக அவர் விமர்சித்தார். இதை தொடர்ந்து, ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்கள் ஆகியும் அவருக்கு கேப்டன் சமாதிக்கு ஏன் போகத் தோன்றவில்லை?என்ற கேள்வியை விஜயப்ரபாகரன் முன்வைத்தார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button