செய்திகள்

தவெக நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் கிடைக்காமல் பொதுமக்கள் ஏமாற்றம்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பழைய பஸ் நிலையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 100-ஆவது நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழக வெற்றிக் கழக அரக்கோணம் நகர செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். மேலும், இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, 100-ஆவது நாள் சாதனைகள் குறித்து சிறப்புரையாற்றினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பொதுமக்களுக்கு டோக்கன்களும் வழங்கப்பட்டன. இதையடுத்து அதிக அளவில் திரண்ட கூட்டத்தை கட்டுப்படுத்தவும், டோக்கன் அடிப்படையில் பயனாளிகளை ஒழுங்குபடுத்தவும் முறையான திட்டமிடல் இல்லாததால் நலத்திட்ட உதவிகள் அவசர அவசரமாக வழங்கப்பட்டதாக தெரிவித்தனர். இதனால் டோக்கன் பெற்றிருந்த பலரும் நீண்ட நேரம் காத்திருந்தும் நலத்திட்ட உதவி கிடைக்காமல் சிலர் ஏமாற்றத்துடன் திரும்பியதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button