
தூத்துக்குடி மாவட்டம் மூன்றாவது மைல் பகுதியில் மதுபானக் கடை செயல்பட்டு வருகின்றது. அந்த கடையில் இரவு 10 மணியளவில் மதுபான விற்பனை முடிந்ததும் ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். அப்போது, மர்ம நபர்கள் மதுபான கடையில் உள்ளே புகுந்து, லாக்கரை உடைக்க முடியாத காரணத்தால் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து, ஊழியர்கள் இன்று காலை வந்து கடையை திறக்க முயன்ற போது, மதுபானம் வைக்கப்பட்டிருந்த அறையில் உள்ள இரும்பு லாக்கர் உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்ததுள்ளது . இதையடுத்து, மர்ம நபர்கள் லாக்கரை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றதாகவும், அது முடியாததால் கடையில் இருந்த சுமார் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை எடுத்துச் சென்றதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து மதுபான ஊழியர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பின்னர் மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
