செய்திகள்

கிருஷ்ணகிரி : 40 ஏக்கர் நிலத்தில் 12,000 மரக்கன்றுகள் நடும் பணி – ஆட்சியர் தினேஷ் குமார் நேரில் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டம் மோட்டூர் கிராமத்தில் வனத்துறைக்குச் சொந்தமான 40 ஏக்கர் நிலப்பரப்பில் 12,000 மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட பசுமைக் குழு நிதியின் கீழ், பல்வேறு வகையான மரத்தோட்டம் அமைக்கும் நோக்கில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து, தனியார் நிறுவனம் ஒன்று பொறுப்பேற்று, இந்த மரக்கன்றுகளை நட்டு ஒரு ஆண்டிற்குத் தொடர்ந்து பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. இதனை ஆட்சியர் விரிவாகக் கேட்டறிந்து ஆய்வு செய்தார். அதன் பிறகு வேம்பு, புங்கன், நாவல், அரசு உள்ளிட்ட 24 வகையான மரக்கன்றுகள் இங்கு நடப்பட்டு வருகின்றன. மேலும், 12 ராசிகளுக்குரிய செடிகள் கொண்ட ராசி வனம், 27 நட்சத்திரங்களுக்குரிய செடிகள் கொண்ட நட்சத்திர வனம் ஆகியவையும் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருவதை ஆட்சியர் பார்வையிட்டு பாராட்டினார். இந்த ஆய்வின்போது, வனத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் உடனிருந்தகாக தெரிகின்றது .

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button