திண்டுக்கல் – பழனி தேசிய நெடுஞ்சாலை 83- ல் பிரபல தனியார் கல்லூரி மற்றும் பள்ளி வளாகம் உள்ளது . இங்கு 5000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்து வருகின்றனர் . கல்லூரி வளாகத்தில் இன்று ஓணம் பண்டிகை தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது . அதற்காக மாணவ மாணவியர் பாரம்பரிய உடையில் வந்திருந்தனர். நிகழ்ச்சி முடிந்து சுமார் 4 மணி அளவில் வெளியில் வந்த மாணவ மாணவியர் பலர் பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருந்தனர்.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரத்தில் சில மாணவர்கள் மாற்றம் செய்யப்பட்ட சைலென்சர்கள் பொருத்திய இரு சக்கர வாகனங்களில் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக இயக்கி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளின் கவனத்தை திருப்பும் வகையிலும் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவர்கள் அச்சமடையும் வகையிலும் இயக்கினர்.
இது குறித்து கல்லூரி நிர்வாகம் , காவல்துறை மற்றும் சாலை போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் மாணவ மாணவியரின் பாதுகாப்பினை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது