
திருவள்ளூரை அடுத்த அகரம் பகுதியைச் சேர்ந்த ரமணி என்பவர் உயிரிழந்த நிலையில், அவரது இறுதிச்சடங்கில் அப்பகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகி மணிகண்டன் கலந்து கொண்டார். இந்நிலையில், மயானத்திற்கு சென்ற போது, கார்த்திக் என்பவருக்கும் மணிகண்டனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இரு தரப்பினரும் மோதிக்கொண்ட நிலையில், மணிகண்டனின் கழுத்தில் பலமாக வெட்டப்பட்டதால் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அப்பொழுது அவரை உடனடியாக மீட்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் கோபமடைந்த மணிகண்டன் உறவினர் திருவள்ளூர்–பேரம்பாக்கம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
