க்ரைம்

காவல் நிலையத்தில் கையெழுத்திடச் சென்றவர் வெட்டிக்கொலை – மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

திருவள்ளூர் மாவட்டம் பாகல்மேடு பகுதியில் பட்டப்பகலில் ஒருவர் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாரிமுத்துவின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த விசாரணையில் அவர் வழக்கு தொடர்பாக காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதற்காக சென்று கொண்டிருந்தபோது, அவரை இருசக்கர வாகனங்களில் வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் வழி மறித்ததாக தெரிகின்றது. இதை தொடர்ந்து, மாரிமுத்துவை சரமாரியாக வெட்டி விட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? வழக்கு தொடர்பான விவகாரமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button