க்ரைம்

திண்டுக்கல்; நகை அடகு கடையில் திருட முயன்ற மர்ம கும்பல்

திண்டுக்கல் மாவட்டம், நத்ததை அடுத்த மீனாட்சிபுரத்தில் வேலாம்பட்டியை சேர்ந்த முதியவர் நகை அடகு கடை நடத்தி வருகிறார். அவர் வழக்கம்போல் இரவு கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள், துணியால் முகத்தை மறைத்தபடி கடையின் சுவற்றை கடப்பாரையால் துளையிட்டு உள்ளே நுழைய முயன்றுள்ளனர். அப்போது, ஆட்கள் நடமாட்டம் இருப்பதை கண்டு, சுமார் ஒரு மணி நேரம் முயற்சி செய்தும் சுவற்றை உடைக்க முடியாததால் அங்கிருந்து மர்ம கும்பல் தப்பிச் சென்றனர். இந்நிலையில், திருட முயன்ற சம்பவம் அப்பகுதி வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button