
சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் மாநகராட்சி மண்டல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு சர்வேயராக முருகேசன் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், நிலம் அளப்பதற்காக விவசாயி ஒருவரிடம் முருகேசன் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, விவசாயி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
அந்த தகவலின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இன்று விவசாயிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்றபோது, அங்கு மறைந்திருந்த சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சர்வேயர் முருகேசனை கைது செய்தனர்.
இதை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட சர்வேயர் முருகேசனிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
