க்ரைம்

விஜய் பட பாணியில் பெண்களின் தலை முடிக்கு வந்த சோதனை !!

மொட்டை அடித்தால் கொரோன வராது என்று சொன்னதை நம்பிய பெண்களின் பரிதாபநிலை !!

முடியை பறி கொடுத்த அப்பாவி பெண்கள் !!

விஜய் நடித்த திருப்பாச்சி திரைப்படத்தில் அவரது தங்கையிடம் முடியை காண்பித்து வெறுப்பேற்றும் பக்கத்துக்கு வீட்டு பெண்ணின் முடியை வெட்டி வா என்று கூறுவார்.அதற்க்கு விஜய் , ஆள்மாறி அந்த பெண்ணின்னுடைய தாயாரின் தலை முடியை வெட்டி விடுவது போன்ற காட்சி நகைச்சுவையாக அமைக்கப்பட்டு இருக்கும்

ஆனால் கிட்டதட்ட அதே வன்மத்திற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவம் தமிழ்நாட்டு பெண்களை அட பாவிகளா என்று சொல்ல வைத்து இருக்கிறது. சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள புதுகொத்தாம்பாடி கிராமத்தை சேர்ந்த பழனியம்மாள் என்பவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்து இருக்கிறது.

அதில் பேசிய நபர் தன்னை ஆத்துர் தாசில்தார் என்றும் பழனியம்மாளின் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை கூறி இருக்கிறார்.இதனை தொடர்ந்து நம்பிக்கையடைந்த பழனியம்மாள் அந்த நபர் சொல்லும் விவரங்களை ஆர்வமாக கேட்டு இருக்கிறார்.

அப்போது, கொரோனா போன்ற புதுவித நோய் நாடு முழுவதும் பரவிவருவதாகவும்அதிலிருந்து தப்பிக்க வெளிநாடுகளில் பலரும் மொட்டை அடித்து கொளவதாகவும் அதே போல நீங்களும் மொட்டை அடித்து கொள்ள வேண்டும் என்றும், அப்படி மொட்டை அடித்து கொள்பவர்களுக்கு பெண்கள் என்றால் ரூ 15 ஆயிரமும் , ஆண்கள் என்றால் ரூ 6 ஆயிரமும் அரசு சார்பில் ஊக்கத்தொகையாக கொடுக்கப்படும் என்று கூறி இருக்கிறார்.

மேலும் பழனியம்மாளிடம், உங்கள் ஊருக்கு 18 டோக்கன் மட்டுமே உள்ளதாகவும் விரைவாக மொட்டை அடிக்கவும் என்றும், மொட்டை அடித்தபின்பு மொட்டை தலையுடன் வாட்ஸ் அப்பில் போட்டோ அனுப்புமாறும் கூறி இருக்கிறார்.

இதன் பின்னர் நேராக ஊருக்கு வந்து மொட்டை அடித்தவர்களுக்கு பணம் கொடுக்கப்படும் என்றும் அந்த நபர் கூறி இருக்கிறார். மேலும் இதே போன்றும் பல இளம்பெண்களும் மொட்டை அடித்து இருப்பதாகவும் அவர்களின் போட்டோக்களையும் வாட்சப்பில் பகிர்ந்து, மொட்டை அடித்ததால் பல பெண்கள் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுக்களை பெற்றதாக கூறி அதற்கான போட்டோக்களையும் வாட்ஸ் அப்பில் ஷேர் செய்து இருக்கிறார்.

இதனை நம்பிய 50 வயதை கடந்த பழனியம்மாள், காவேரி உள்ளிட்ட மூன்று பெண்கள் மொட்டை அடித்து விட்டு பக்கத்து வீடுகளை சேர்ந்த சுமார் 18 பெண்களையும் மொட்டை அடிக்க சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அந்த பெண்கள் உஷாராக தாசில்தார் வந்து பணம் கொடுத்த பின்னர் மொட்டை அடித்து கொள்ளவது கூறி காத்து கொண்டுஇருந்துள்ளனர்.

அனால் இரவு எட்டுமணி வரை ஒருவரும் வராததால், சந்தேகமடைந்த பழனியம்மாள் தாசில்தார் என்று பேசிய செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட பொது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என தெரியவந்து இருக்கிறது. இதன் பின்பே மூவரும் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அதிர்ச்சியடைந்து இருக்கின்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் மூவரும் ஆத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். எத்தனையோ வகை மோசடிகளை பார்த்த ஆத்தூர் போலீசார் இது என்னடா முடிக்கு வந்த சோதனை என தலையில் அடித்து கொள்ளாத குறையாக

வழக்கு பதிவு செய்து பெண்களை மொட்டை அடிக்கவைத்த அந்த பலே ஆசாமியை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். மேலும் யாரையும் பழி வாங்கும் நோக்கில் இதனை அந்த நபர் செய்து இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை வேகம் கண்டு வருகிறது.

இதே நேரத்தில் நல்லவேளை நம்ம முடி தப்பிச்சதுபா என 18 பெண்களும் நிம்மதி பெரு மூச்சு விட்டு இருக்கின்றனர். மொட்டை அடித்த மூன்று பெண்களில் ஒருவருடைய கணவரின் தாய் இறந்ததற்கு கூட மொட்டை அடிக்காத நீ இப்போது பணத்திற்காக அடித்தாயா என் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வருவதாக ஊர்மக்கள் கூறி வருகின்றனர்.

மக்களை பல நூதன முறைகளில் ஏமாற்றி பணத்தை பறித்த சம்பவங்கள் தொடர்பாக வழக்குகள் பல இருந்தாலும் பெண்களின் அழகிற்கும் மரியாதைக்கும் உரியதாக கருதப்படும் முடியை எதற்காக மொட்டை அடிக்க வைக்கவேண்டும் ? என்பதுதான் தற்போதைக்கு தமிழ்நாட்டு மக்களின் மில்லியன் டாலர் கேள்வி

Show More

Sathish

OUTPUT EDITOR

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button