க்ரைம்
Trending

காரில் கடத்தி வந்த 284 கிலோ குட்கா, கார் பறிமுதல் – குற்றவாளி தப்பி ஓட்டம்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் DSP.பவித்ரா உத்தரவின் பேரில் காவல் நிலைய ஆய்வாளர் கணேசமூர்த்தி தலைமையில் சார்பு ஆய்வாளர் பாலகுமாரசாமி மற்றும் காவலர்கள் காசிபாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமாக வேகமாக வந்த காரை நிறுத்தினர். காரை நிறுத்தி காரில் இருந்தவர் இறங்கி தப்பி ஓடிவிட்டார்.

காரை சோதனை மேற் கொண்ட போது காரில் மூட்டை, மூட்டையாக அரசால் தடை செய்யப்பட்ட 284 கிலோ குட்கா இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து போலீசார் குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்து வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button