செய்திகள்

திருநெல்வேலி : தனியார் பேருந்து மோதி இருவர் பலி

திருநெல்வேலி மாவட்டம் பிள்ளையார்குளத்தைச் சேர்ந்த முனியாண்டி தனது பேரன் முனிஷ் உடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது திருநெல்வேலி–சங்கரன்கோவில் சாலையில் சென்றபோது, பின்னால் வந்த வாகனத்தை கவனிக்காமல் முனிஷ் திடீரென இருசக்கர வாகனத்தை வலதுபுறமாக திருப்பியுள்ளார்.

அப்போது குமுளியில் இருந்து திருநெல்வேலி நோக்கி வந்த தனியார் பஸ், இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முனியாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, பலத்த காயமடைந்த முனிஷை ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனியார் பஸ் ஓட்டுநரான கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோட்டைச் சேர்ந்த சுபாஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button