செய்திகள்

பிரியாணி பேனரில் விநாயகர் படம் இருப்பதால் புகார் – கடை உரிமையாளர் கைது

நெல்லை மாவட்டம் வி.எம். சத்திரம் மேம்பாலம் அருகே பிரியாணி கடை சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனரில், விநாயகர் பிரியாணி சாப்பிடுவது போன்ற படம் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இந்தப் படம் இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி, நரசிங்கநல்லூரைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர் . இந்நிலையில், சம்பந்தப்பட்ட பிரியாணி கடையின் உரிமையாளர் ஜெயந்த் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த பேனரில் இடம்பெற்றிருந்த விநாயகர் படம் தொடர்பான புகார், தற்போது கைது நடவடிக்கை வரை சென்றுள்ளதால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button