க்ரைம்
Trending

கடந்த கால ஆட்சியைப் போல நாங்கள் இல்லை – திண்டுக்கல்லில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் விக்னேஷ் பேட்டி.

திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மிகவும் பின்தங்கியுள்ளது, கடந்த கால ஆட்சியாளர்கள் அவர்களது தொகுதியை மட்டும் வளர்ப்பது தான் வளர்ச்சி என்று நினைத்திருப்பார்கள் போல - திண்டுக்கல்லில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் விக்னேஷ் பேட்டி.

ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்துவிட்டு தான் அவர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்க முடியும் என திண்டுக்கல்லில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் விக்னேஷ் பேட்டி.

திண்டுக்கல் மாவட்டத்திற்கு இன்று வருகை புரிந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் விக்னேஷ் திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார் பின்னர் சின்னாளபட்டியில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு பெட்டகத்தை வழங்கினார். இறுதியாக திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வரும் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை துவங்கி வைத்து, தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கும் வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு அணிக்கான சீருடைகளை வழங்கினார்., பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் விக்னேஷ் :

முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இன்று நடந்து கொண்டிருக்கிறது.

திண்டுக்கல்லில் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். இன்று மகளிருக்கான விடுதி திறக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்லில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பகுதிக்கும் செல்ல வேண்டும் என்பதுதான் எனது நோக்கம் ஆத்தூர், நிலக்கோட்டை வத்தலகுண்டு போன்ற பகுதிகள் பார்ப்பதற்கு மிகவும் பின்தங்கி உள்ளது.

வளர்ச்சி என்பது தமிழகம் முழுவதும் ஒரே சீராக இருக்க வேண்டும் எந்தெந்த தொகுதியில் இருக்கிறார்களோ அந்தந்த தொகுதியை வளர்ப்பதுதான் வளர்ச்சி என்று நினைத்திருப்பார்கள் போல. என்னுடைய நோக்கம் திண்டுக்கல்லில் அடிப்படை விஷயங்களில் இருந்தே மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.

உசிலம்பட்டி மக்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா போன்ற பல்வேறு கேள்விகளுக்கு :

என்னுடைய துறை சார்ந்த கேள்விகளுக்கு மட்டுமே என்னால் பதிலளிக்க முடியும்.
தலைமையின் கட்டுப்பாட்டின் காரணமாக பதில் சொல்ல முடியவில்லை என்றார்.

பிளாக்கில் மது விற்பனை செய்யப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது, சில்லிங் அதிகமாக விற்கின்றனர் குறித்த கேள்விக்கு :

சில்லிங் னா என்ன? என்று கேட்டுவிட்டு, தமிழக வெற்றி கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், பகல் 12 மணிக்கு முன்பு இரவு 10 மணிக்கு மேல் விற்ககூடாது. அப்படி எங்கு விற்கிறார்களோ அங்கு கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை முதல் நாளிலிருந்து கவனம் செலுத்தி வருகிறோம்‌.

இவ்வாறான தவறுகள் நடக்கும் பட்சத்தில் எங்களின் பார்வைக்கு கொண்டு வாருங்கள்.
நாங்கள் மற்ற கட்சியினர் போல இந்தப் பக்கம் நீ நடத்து, நாங்கள் அந்த பக்கம் நடத்த மாட்டோம் என்று செயல்பட மாட்டோம். நடவடிக்கை எடுப்போம். தவறு செய்யும் அனைவரின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுப்போம் எனது பொறுப்பில் உள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் இது போல் நடக்காமல் பார்த்துக் கொள்வேன்

கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கிறார்கள். சம்பந்தப்பட்ட சேல்ஸ்மேன் மீது நடவடிக்கை எடுக்கிறீர்கள். ஏன் அதிகாரிகள் மீது எடுப்பதில்லை என்ற கேள்விக்கு :

கடந்த எட்டாம் தேதி நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், எந்த பகுதியில் இதுபோன்ற முறைகேடுகள் நடக்கின்றதோ அதற்கு சூப்பர்வைசர், சேல்ஸ்மேன் மட்டும் பொறுப்பில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும், மாவட்ட மேலாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த ஒன்றாம் தேதியிலிருந்து ஊழியருக்கான ஊதிய உயர்வு அதிகமாக கொடுக்க வேண்டும், அவர்களுக்கான தேவைகளை முதலில் நிறைவேற்றி விட்டுதான் சஸ்பெண்ட் அப்படிப்பட்ட முறைகளை எடுக்க வேண்டும்.

கடுமையான தண்டனைகள் மூலம் அனைத்தையும் மாற்ற முடியும் என்று எனக்கும் மாண்புமிகு முதல்வருக்கும் இந்த அரசுக்கும் உடன்பாடு இல்லை. அதனால் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்துவிட்டு கடந்த ஒன்றாம் தேதியிலிருந்து தான் ஆரம்பித்திருக்கிறோம்.

இதற்கு மேலும் தவறு நடந்தால் மேற்பட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

FL 2 கொடுத்தது யாரு? கடந்த ஆட்சியில் தான் கொடுத்திருக்கிறார்கள். FL2 பார் தமிழக வெற்றி கழகம் ஆட்சியில் வந்ததிலிருந்து ஒன்று கூட கொடுக்கவில்லை.

அதில் அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் விற்கலாம் என்று இருப்பது தெரிந்தே தான் கடந்த அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. இதிலிருந்து ஒவ்வொரு FL 2க்கும் லஞ்சமாக பணம் வாங்கலாம் என்று தெரிந்தே தான் கொடுத்திருக்கிறார்கள்.

FL1 சரி செய்து கொண்டு வருகிறோம். அடுத்தது FL 2 க்கு தான் போகப் போகிறோம்.

பார் ஓப்பன் பண்ணுவது காலதாமதம் ஆகும் என்று சொல்கிறார்கள் குறித்த கேள்விக்கு :

அது கடந்த ஆட்சியில் இருந்த சிஸ்டம் மாதிரி இருக்காது. முகம் சுளிப்பது போன்று இருக்காது. சட்ட மாற்றங்களை கொண்டு வருகிறோம். அடுத்த மாதம் டெண்டர் விடப்படும்.

மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக இருக்கிறீர்கள். இங்கு விவசாயத்திற்கு மண் எடுக்கிறோம் என்று கூறி கமர்சியலுக்கு மண் எடுத்து கொண்டு இருக்கிறார்கள். ஆத்தூர், நிலக்கோட்டை போன்ற பகுதிகளிலும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தவெக பொறுப்பாளர்கள் 20 க்கும் மேற்பட்டோரின் மீது வழக்குப்பதிவு செய்து இருக்கிறார்கள் குறித்த கேள்விக்கு :

சட்டமன்றத்தில் எங்களுடைய நீர்வளத்துறை பொதுச்செயலாளர் தெளிவாக சொல்லி இருக்கிறார். தப்பு செய்வதில் கட்சியை நாங்கள் பார்க்க மாட்டோம். எந்த கட்சி செய்தாலும் அது தப்புதான். அது தவெக வாக இருந்தாலும் சரி, திமுக மற்றும் அதிமுகவாக இருந்தாலும் சரி. அதற்கு உதாரணமாக பல பேர் இந்த கட்சியை விட்டு நீக்கப்பட்டு இருக்கிறார்கள். நாங்கள் திமுக மாதிரி கிடையாது என்று தெரிவித்தார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button