
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வத்தலக்குண்டில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூக நலத்துறை சார்பில் சுமார் 200 கர்பிணி தாய்மார்களுக்கு “சமுதாய வளைகாப்பு” செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட நிர்வாகம் சார்பில் காலை 12-மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட வளைகாப்பு நிகழ்ச்சிக்கு,மாவட்ட பொறுப்பு அமைச்சரும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான விக்னேஷ் தாமதமாக மதியம் இரண்டு மணிக்கு மேல் தான் வந்தார்,இதனால் காலை
11-மணிமுதல் அமர வைக்கப்பட்ட கர்பிணி தாய்மார்கள் சுமார் 2-மணி நேரத்திற்கு மேலாக காக்க வைக்கப்பட்டதால் கடும் சோர்வடைந்தனர். இதனால் ஒருவர் பின் ஒருவராக கிளம்பிய கர்பிணிகளுக்கு அதிகாரிகள் விழாவிற்கு முன்னதாகவே தாய்மார்களுக்கு உணவு வழங்கி மீண்டும் அமர வைத்தனர்.
மேலும் இந்த நிகழ்ச்சிக்கு நிலக்கோட்டை (தனி) தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தவெக-வால் அறிவிக்கப்பட்ட புதிய மாவட்ட செயலாளருமான அய்யனாருக்கு மதுவிளக்கு அமைச்சரும்,திண்டுக்கல் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான விக்னேஷ் சார்பிலும்,மாவட்ட ஆட்சியர் (நிர்வாகம்) சார்பிலும் (அழைக்காததால்), உரிய தகவல் தெரிவிக்காததால்
எம்எல்ஏ-அய்யனார் கலந்துகொள்ளவில்லை,
எம்எல்ஏ அவர் தொகுதியிலே புறக்கணிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏற்கனவே திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரும்,மாவட்ட பொறுப்பு அமைச்சரும் மற்ற தவெக மாவட்ட செயலாளர்களும் நிலக்கோட்டை (பட்டியலின) தனித் தொகுதி எம்எல்ஏ-வான அய்யனாரை புறக்கணித்ததையடுத்து சமீபத்தில் தலைமையின் சார்பில் அவரை அவர் தொகுதிக்குட்பட்ட பகுதியை உள்ளடக்கி தென்மேற்கு மாவட்ட செயலாளராக அறிவித்தனர்.
இந்நிலையில் இன்று அவர் தொகுயிலே நடைபெற்ற சமுதாய வளைகாப்பு அரசு விழாவில் அவர் புறக்கணிக்கப்பட்ட சம்பவம் மேலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
இதனையடுத்து அவர் தொகுதிக்குட்பட்ட வத்தலக்குண்டு பகுதியில் பொறுப்பு அமைச்சர் தலைமையில் அரசு நிகழ்ச்சி நடப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து நிகழ்ச்சி முடியும் தருவாயில் எம்எல்ஏ அய்யனார், சமுதாய வளைகாப்பு விழாவில் வந்து கலந்து கொண்டார்…
வார்த்தைக்கு வார்த்தை சமூக நீதி பேசும் தவெக-ஆட்சியில்,திண்டுக்கல் மாவட்டத்தில் தவெக-வென்ற ஒரே தொகுயான நிலக்கோட்டையில், பட்டியலின எம்எல்ஏ என்பதாலையே மாவட்ட ஆட்சியர் முதல் பொறுப்பு அமைச்சர் வரை தொடர்ந்து புறக்கணிப்பது இந்த நிகழ்ச்சி மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது, இந்த சம்பவம் தவெக-தொண்டர்கள் மட்டுமின்றி நிலக்கோட்டை தொகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….