க்ரைம்
Trending

தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.6,50,000 கையாடல் செய்த கிளை மேலாளர் கைது

திண்டுக்கல் பேருந்து நிலையம், குறிஞ்சி லாட்ஜ் அருகே உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த முத்து மகன் சகாய ஜான்பீட்டர் என்பவர் கிளை மேலாளராக பணியாற்றி வந்தார் இந்நிலையில் ஜான் பீட்டர் வசூல் செய்த பணத்தில் ரூ.6,50,000 கையாடல் செய்தது தொடர்பாக பொது மேலாளர் திருமுருகன் கேட்டபோது சகாயஜான்பீட்டர் அசிங்கமாகவும் ஆபாசமாகவும் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக நகர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வசந்த்குமார் சார்பு ஆய்வாளர் சூர்யாகலா மற்றும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு மேற்படி நிதி நிறுவனத்தில் கையாடல் செய்த சகாயஜான்பீட்டரை கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button