
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் அஜித்குமார் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம், நகை திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்காக அவரை போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது அவரை அடித்து துன்புறுத்தியதில் அவர் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டு 6 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர் இந்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டி.எஸ்.பி. உள்ளிட்ட 4 பேர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.