
கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி தெற்கு மலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் நாட்டு வெடிகுண்டு வைத்து மிளா வேட்டையாடியதாக, காட்டுப்புதூரைச் சேர்ந்த ஆல்வின் (30), ரமேஷ் (42) ஆகிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து இருவரையும் அடையாளம் கண்டு கைது செய்த வனத்துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
