
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வடமதுரை ரயில் நிலையத்தில் ரயில் போக்குவரத்து விரிவாக்கத்திற்காக ரயில்வே துறையின் சார்பாக நிலங்கள் எடுக்கப்பட்டது
அதில் ஒரு சிலருக்கு சதுர அடி கணக்கிலும் , ஒரு சிலருக்கு ஏக்கர் கணக்கிலும் இழப்பீடு தொகை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது
இடத்தை கொடுக்க ஒப்புக்கொண்ட ஒரு சிலர் இழப்பீட்டை பெற்றுக் கொண்டனர் சரவணன் என்பவர் மட்டும் அரசு கொடுத்த இழப்பீட்டை வாங்க மறுத்து முறையாக கணக்கிட்டு அதிகப்படியான இழப்பீட்டுத் தொகையை தர வேண்டும் என ரயில்வே நிர்வாகத்திடம் முறையிட்டார் என தெரிகிறது இதனை ரயில்வே நிர்வாகம் ஏற்காத காரணத்தினால் அவர் தனது இடத்தினில் ரயில்வே பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார்
ஆர்.டி.ஓ … உத்தரவுப்படி ஆர்ஜிதம் செய்த இடத்தில் இன்று ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
பணி தொடங்கிய போது மீண்டும் தகராறில் ஈடுபட்டதால் ரயில்வே பாதுகாப்பு காவல்துறையினர் சரவணன் என்பவரை கைது செய்து அழைத்துச் சென்று இப்போ பிரச்சினையை சட்டப்படி அணுக வேண்டும் என்று ஆலோசனைக் கூறி அவரை சொந்த ஜாமினில் விடுவித்தனர்
கைது செய்யப்பட்ட சரவணன் என்பவர் அதிமுக வில் நிர்வாகியாகவும் வடமதுரை பேரூராட்சியில் அதிமுக 7 வது வார்டு கவுன்சிலர் கவிதாவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.