க்ரைம்

காவல்துறை விரல் ரேகை பிரிவு சார்பு ஆய்வாளர் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்ட காவல் துறையில் விரல் ரேகை பிரிவில் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்த விக்னேஷ்

இவர் பழனி அருகே ஐவர் மலை திரௌபதி அம்மன் கோவிலில் தங்க நகை திருட்டு வழக்கு சம்பந்தமாக ஆய்வுக்காக சென்றவர் படியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பழனி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த விரல் ரேகை பிரிவு சார்பு ஆய்வாளர் விக்னேஷின் உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் ADSP.தெய்வம், பழனி DSP.செல்வகுமார், பழனி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button