
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே மாவட்ட காவல்துறை மற்றும் மாசில்லா திண்டுக்கல் மாநகரத்தை உருவாக்க இணைவோம் இயக்கம் சார்பாக
நடைபெற்ற போதை விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் IPS அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்தபேரணியில் மாணவ, மாணவிகள் போதைப் பொருட்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர்