க்ரைம்
Trending

போலீசார் வாகன தணிக்கையின் போது 5 கிலோ கஞ்சா மற்றும் 60 ஆயிரம் ரூபாய் பணம் சிக்கியது

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் அருகே திருக்கச்சூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது சந்தேக குறிய காரை மடக்கி போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது விற்பனைக்காக வைத்திருந்த 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

கஞ்சாவை கடத்தி வந்த நபரை கைது செய்து சிங்கபெருமாள்கோவில் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது கஞ்சா கடத்தி வந்தது சென்னை ராயபுரத்தை சேர்ந்த செந்தில்(எ)தாடி செந்தில் (52) என தெரிய வந்தது அவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளது பி பதிவு சரித்திர பதிவேடு குற்றவாளி என காவல் துறை தரப்பில் தகவல் தெரியபடுத்தினர் மேலும் அவரிடம் இருந்த 60 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்தனர்

இதனை தொடர்ந்து செந்தில் மீது சிங்கபெருமாள்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் செங்கல்பட்டு அருகே போலீசார் வாகன சோனையின் போது 5 கிலோ கஞ்சா மற்றும் 60 ஆயிரம் ரூபாய் பணம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button