


இந்தியாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் கடத்தி வரப்பட்டதாக கூறப்படும் சுமார் 10 ஆயிரம் கிலோ எடையுள்ள 60 ஆயிரத்து 448 கடல் அட்டைகளுடன் இலங்கை மன்னார் சௌத்பார் கடலில் வைத்து 26 மீனவர்கள் வெள்ளிக்கிழமை (09/07/2026) அன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் கடல் அட்டைகள் கடத்தப்படுவதாக இலங்கை கடற்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்து கடற்படையினர் மேற்கொண்ட விசேஷ தேடுதல் நடவடிக்கையின் போது கண்டறியப்பட்டுள்ளது.
12 படகுகளில் இருந்து சுமார் 10 ஆயிரம் கிலோ எடையுடைய 60 ஆயிரத்து 448 கடலட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.


