க்ரைம்

லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் சிங்கப்பூரிலிருந்து சென்னை திரும்பிய முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சென்னை விமான நிலையத்தில் பேட்டி

சென்னை, நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த மூன்றாம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பி உத்தரவிட்டது.

ஆனால் உடல் நல குறைவு காரணமாக சிங்கப்பூரில் இருதய சிகிச்சை பெற்று அவர் சம்மனில் ஆஜராகவில்லை இது எடுத்து அவரது வழக்கறிஞர்கள் மருத்துவ சான்றிதழ் உடன் கால அவகாசம் கோரி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் கடிதத்தை ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் இரண்டாவது சம்மன் அனுப்பவும் அதில் முன்னாள் அமைச்சர் வேலுவை நேரில் இராஜராஜ விளக்கம் அளிக்க லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் இதற்கிடையில் கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஒரு அமைச்சர் ஓடி ஒளிந்து விட்டார் இன்னொரு அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி ஆகிவிட்டார் என்ன விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையில் சிங்கப்பூரில் சிகிச்சை முடிந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து தனது உடல்நிலை மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை குறித்து விளக்கம் அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபத் மருத்துவமனையில் இதயம் தொடர்பான சிகிச்சை மற்றும் மருத்துவ பரிசோதனைகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன் அதன் தொடர்ச்சியாக கடந்த 2023 ஆம் ஆண்டிலும் அதே மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டேன்.

சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் உடல்நிலை பரிசோதனைக்காக சிங்கப்பூர் செல்ல முடிவு செய்து கடந்த மாதம் 15 ஆம் தேதி விசாவுக்கு விண்ணப்பித்தேன் 17ஆம் தேதி விசாகடித்ததும் 25ஆம் தேதி இண்டிகோ விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்தேன்.

ஆனால் 25 ஆம் தேதி காலை என் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர் அந்த சோதனையில் நான் முழு ஒத்துழைப்பு அளித்தேன் அன்றைய வைரத்தை ரத்து செய்து மறுநாள் 26 ஆம் தேதி சிங்கப்பூர் சென்றேன் அங்கு இதயம் நரம்பியல் வயிறு மற்றும் ஒவ்வாமை தொடர்பான பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன பல்வேறு நிபுணர் மருத்துவர்களின் ஆலோசனைகளையும் பெற்றேன். ஒவ்வாமை சிகிச்சைக்காக பல நாட்கள் தொடர்ந்து கண்காணிப்பில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது நான் சிகிச்சை பெற்றதற்கான அனைத்து மருத்துவ ஆவணங்களும் மருத்துவர்களின் அறிக்கைகளும் என்னிடம் உள்ளன.

சிங்கப்பூரில் மருத்துவ பரிசோதனையில் இருந்தபோது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஆஜராக சமன் அனுப்பியதாக தகவல் கிடைத்தது உடனடியாக வழக்கறிஞர் மூலம் கடிதம் அனுப்பி மருத்துவ பரிசோதனையில் இருப்பதால் 10 நாட்கள் அவகாசம் வழங்குமாறு கேட்டுக் கொண்டேன் பின்னர் மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்ட போதும் மருத்துவம் முடிந்த பிறகு எந்த தேதியில் அழைத்தாலும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தேன்.

ஓடுறாங்க ஒளியுறாங்க பதுங்குறாங்க என்ற குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை நான் மருத்துவர சிகிச்சைக்காக தான் சிங்கப்பூர் சென்றேன் யாருக்கும் பயந்து செல்லவில்லை சுற்றுலாவுக்காகவோ வேறு எந்த காரணத்திற்காகவோ செல்லவில்லை கடந்த 2016 2023 2026 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன் அதற்கான அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளது சமூக வலைதளங்களில் பலரும் கற்பனையான தகவல்களை பரப்பினர் அதற்கான முழு விளக்கத்தையும் தற்போது அளித்துள்ளேன்.

தொடர்ந்து குறிவைக்கப்படுவீர்களா என கேட்ட கேள்விக்கு,

என்னை தனிப்பட்ட முறையில் குறிவைக்க வேண்டிய அவசியம் இல்லை திமுக சட்டப்பேரவை குறைடாவாக கட்சித் தலைவர் என்னை நியமித்துள்ளார் சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் சார்பில் அரசிடம் கேள்வி எழுப்புவதும் கருத்து தெரிவிப்பதும் எனது கடமை அந்த கடமையை தான் செய்து வருகிறேன் அது சிலருக்கு பிடிக்கிறதா பிடிக்கவில்லையா என்பது வேறு விஷயம்.

ஜூலை 15ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகிவீர்களா என்ற கேள்விக்கு,

நிச்சயம் ஆஜராகுவேன் ஜூலை 12ஆம் தேதிக்குப் பிறகு எந்த தேதியில் அழைத்தாலும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்று ஏற்கனவே தெரிவித்துள்ளேன் அதில் எந்த மாற்றமும் இல்லை இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் இருப்பதால் அதன் விவரங்கள் குறித்து மேலும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை நீதித்துறையின் மீது முழு நம்பிக்கை உள்ளது நான் எந்த தவறும் செய்யவில்லை நீதிமன்றத்தில் எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என இவ்வாறு கூறினார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button