Featuredசெய்திகள்விமர்சனங்கள்

கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் சார்பில் இன்று (01.10.26) மாலை திண்டுக்கல் பழனி சாலையில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகம் முன்பு கவனயீர்ப்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட சுகாதார ஆய்வாளர்கள் சங்க மாவட்ட தலைவர் பாண்டி மாதவன் மற்றும் மாவட்ட துணைத் தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

இதில் சுகாதார ஆய்வாளர்களின் பதவி உயர்வு பணியிடங்களான நேர்முக உதவியாளர், மாவட்ட நல கல்வியாளர், மேற்பார்வையாளர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆகிய பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

சுகாதார ஆய்வாளர் நிலை-2ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

காய்ச்சல்/ டெங்கு கட்டுப்பாட்டு பணிகளில் குளோரினேசன், தீவிர தூய்மை பணிகள், புகை மருந்து அடித்தல் உள்ளிட்ட சுகாதார ஆய்வாளர்களின் நேரடி பணி வரம்பிற்குள் வராத பிற துறைச் சார்ந்த பணிகளை மேற்கொள்ள கட்டாயப்படுத்தக்கூடாது.

தற்போது தீவிர காய்ச்சல்/ டெங்கு தடுப்பு பணிகளில் இருக்கும் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர்களுக்கு கூடுதல் பொறுப்புகளை வழங்கி எல் சி டி சி முகாம்களை நடத்துவதற்கு நிர்பந்தம் செய்யக்கூடாது.

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்களின் சங்கத்தின் மாநில மாநாடு தீர்மானக் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உடனடியாக நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button