
கோவை மாவட்டம், சூலூர் அருகே பாப்பம்பட்டி பகுதியில் பெண் ஒருவர் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த இரண்டு வாலிபர்கள், கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் சத்தமிட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் விரைந்து வந்து, மதுபோதையில் இருந்ததாக கூறப்படும் இருவரையும் பிடித்தனர். பின்னர் அவர்களுக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள், காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடம் நடந்த சம்பவத்தை கூறி மது போதையில் இருந்த இருவரையும் ஒப்படைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
