க்ரைம்

தென்காசி : கஞ்சா கடத்திய இருவர் கைது -1 கிலோ கஞ்சா, 254 போதை சாக்லேட்டுகள் பறிமுதல்



தென்காசி மாவட்டம் காலாங்கரை பகுதியில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின் போது வாகனத்தில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, செங்கோட்டை காவல் ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் அடிப்படையில், செங்கோட்டை பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் மற்றும் பாஸ்கரன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் போதைச் சாக்லேட்டுகள் உள்ளிட்ட ரூ.85 ஆயிரம் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டனர். மேலும், இது குறித்து போலீசார் இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button